கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யனைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது. இந்நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை. கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையின் போது குட்டி யானையுடன் மற்றொரு குட்டி யானையும் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரிகிறது. மேலும் நேற்று இரவு அந்த குட்டி யானையுடன் இந்த ஆண் குட்டி யானை சென்று இருக்க வாய்ப்பு இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். குட்டியானையை கண்டுபிடிக்க ட்ரோன் மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.