அரியலூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அனைத்து கிளைக் கழகத்திலும் கட்சி கொடியை ஏற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கலைஞரின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அனைத்து துறைகளும் தற்போது முன்னேறியுள்ளது என்றால், அதற்கு கலைஞர் அமைத்த அடித்தளமே காரணமாகும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்துவரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தெருமுனை பிரச்சார கூட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றார். மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.