நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது.இதில் அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
8.30 மணி நிலவரம் சிக்கிமில் ஆட்சியை தக்கவைக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 – பெரும்பான்மை 17
சிக்கிம் கிராந்திகாரி 31 (முன்னிலை) சிக்கிம் ஜனநாயக முன்னணி – 1 பா.ஜ.க. – 0 காங்கிரஸ் – 0 மற்றவை – 0
அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பா.ஜ.க.
அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 – பெரும்பான்மை 31
பா.ஜ.க – 35 (முன்னிலை) தேசிய மக்கள் கட்சி — 6 காங்கிரஸ் – 1 மற்றவை – 7 பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அருணாசல பிரதேசத்தி்ல் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.