டில்லியில் இன்று ‛ இண்டியா ‘ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, சரத்பவார், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், கூட்டத்தின் இறுதியில் கார்கே நிருபர்களிடம் கூறியதாவது.. மத்தியில் இண்டியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரிக்க நினைக்காதீர்கள். உண்மையான கருத்துகணிப்பை வெளியிட வேண்டும்.
இன்றைய கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள், மையத்தில் இருந்து வெளியே வரக்கூடாது. விதிமுறைகள் படி ஓட்டுகளை எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க இருக்கிறோம். இவ்வாறு கார்கே கூறினார்.