அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது. இதனால் தப்பி ஓடிய மான் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மயங்கி கிடந்துள்ளது. இச்சம்பவம் குறிந்து தகவலறிந்து வந்த செந்துறை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது பெண் மான் இறந்தது தெரியவந்தது. மேலும் தண்ணீர் குடிக்க கிராமத்திற்குள் வன விலங்குகள் வருவதால் நாய்களால் தாக்கப்பட்டு இறக்க நேரிடுகின்றன. எனவே வனப்பகுதியில் வெயில் காலங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பி வனவிலங்குகளை காப்பாற்ற வேண்டும் வேண்டும் என பொது மக்கள் அரசிற்கும், வனத்துறையினருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
