கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் ,நடனம் குறித்து அறிந்து கொள்ள நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய நாட்டினை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களது நாட்டின் பல்வேறு கலாச்சார நாட்டிய நடனங்களை மேடையில் அரங்கேற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பொங்கலுக்கு வெளியான வாரீசு திரைப்படத்தில் ஹிட் அடித்த குத்துபாடலான ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்யா நாட்டு கலைஞர்கள் நமது தமிழ் பெண்கள் அனியும் பாரம்பரிய உடையான பாவடை தாவனியில் வந்து செம குத்தாட்டம் போட்டனர் இதனை பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் கரகோஷங்களை
எழுப்பி கலைஞர்களை உற்சாகபடுத்தினர்.மேலும் இந்தியா ரஷ்ய நாட்டு கலாச்சாரத்தை தமிழ்நாடு மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 20 வது ஆண்டாக இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்துள்ளதாகவும்,தொடர்ந்து பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இம்மாத இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கலாச்சார குழுவின் தமிழ்நாடு ஒருங்கினைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாரம்பரிய முறைப்படி மாலை அனிவித்து மரியாதை செலுத்திய துடன் நினைவு பரிசு வழங்கி பள்ளி நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ்,மனிமேகலை மோகன்தாஸ் பாராட்டு தெரிவித்தனர்.