டில்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டில்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.வெப்ப அலை தாக்கத்தால் வட மாநிலங்களில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பீகாரில் 32 பேர் வெப்பவாதம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.