திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் டர்பைன் நீர்ப்பணி நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கரூர் பிரதான சாலை அய்யாளம்மன் படித்துறை கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் டர்பைன் நீர்ப்பணிநிலையத்தில் உள்ள மின்மோட்டார்களுக்கு flow meter பொருத்த வேண்டியுள்ளது.
மேற்கண்ட பணிநாளை (1ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளதால் டர்பைன் நீாப்பணிநிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 2.6.2024 அன்று ஒருநாள் இருக்காது. மறுநாள் 3.6.2024 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும்.
இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.