கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பதை கண்டு பிடித்தனர். மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் வழிகாட்டுதலின் படி மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச் சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை மற்றும் பழங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் யானை மற்றும் குட்டி யானை தொடர் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.