என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் என்று தமிழக காவல் துறையில் வர்ணிக்கப்பட்டவர் வெள்ளத்துரை. எஸ்.ஐயாக காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பியாக(ஏடிஎஸ்பி) உள்ளார். இவர்இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் ரவுடிகளை என்கவுன்டர் செய்தவர். தற்போது வெள்ளத்துரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவர் 2013ல் சிவகங்கையில் பணியாற்றியபோது மருதுபாண்டியன் குருபூஜையில் சப்இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இருவரை வெள்ளத்துரை என்கவுன்டர் செய்தார். இந்த வழக்கு இவர் மீது இருந்தது. இந்த வழக்கில் இவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளத்துரையின் மனைவி கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்பைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.