திருச்சி புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமாந் ட்ரஸ்ட் சார்பாக 2-ம் ஆண்டு ஆன்மீீக கோடை விடுமுறை முகாம் 5 நாள் நடைபெற்றது. இந்த முகாமினை ஸ்ரீமாந் ட்ரஸ்டின் தொண்டர்களான பட்டு திருவேங்கடமும், இந்திராணி ஸ்ரீனிவாசுலு தலைமை தாங்கி நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த முகாம் சனாதன தர்மத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஈஸ்வரர்,
தேசிய கல்லூரியின் மூத்த உதவியாளர் பாலு என்கிற நாராயணன், ஈ.ஆர். மேல்நிலைப்பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் வெங்கடேசன், ஐயங்கார் புத்தூர் மண்டல தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்