தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் திறந்த நாளிலேயே குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும்என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. . அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி பாடநூல்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ரூ.1.2 கோடியில் 4.18 கோடி பாடநூல்களும் அச்சிடப்பட்டுள்ளன. ஏற்கனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் நோட்டு, புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. அங்கிருந்து பள்ளிகள் வாரியாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்த பணி நாளைக்குள் முடிவடையும்.