காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மன்மோகன்சிங், 10 ஆண்டு, 4 நாட்கள் பிரதமராக இருந்தார். 2014 மே 26ல் பதவியேற்ற மோடி, மே, 31ம் தேதியான நாளையுடன், 10 ஆண்டு, 5 நாட்களை நிறைவு செய்கிறார். இதனால், அவர் மன்மோகன் சிங்கை விட அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனையை தொடுகிறார்.
இந்தியாவில் அதிக காலம் பதவி வகித்த 5 பிரதமர்கள்.
1. நேரு 16 ஆண்டு 286 நாட்கள் (1947 — 1964)
2. இந்திரா – 15 ஆண்டு 350 நாட்கள் (1966 — 1977, 1980 — 1984)
3. மோடி – 10 ஆண்டு, 5 நாட்கள் (2014 — 2024)
4. மன்மோகன் சிங் – 10 ஆண்டு, 4 நாட்கள் (2004 — 2014)
5. வாஜ்பாய் – 6 ஆண்டு, 80 நாட்கள் (1996, 1998 — 2004)