Skip to content
Home » 1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

01.06.2024 மற்றும் 02.06.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29.05.2024 மற்றும் 30.05.2024 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
31.05.2024 முதல் 02.06.2024 அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-2 செல்சியஸ்) சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!