கடந்த வாரம் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தடுப்பு கட்டையில் டிவிஎஸ் மொபட்டை வாலிபர் ஒருவர் ஓட்டி செல்வது போன்ற வீடியோ வைரலானது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற எந்த நபர் யார்? என்பது குறித்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்மந்தப்பட்ட நபர் மண்ணச்சநல்லூர் பூனாம் பாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி (22) என்பவர் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு கட்டையில் டூவீலர் ஒட்டி சென்ற குருமூர்த்தி மீது கொள்ளிடம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.