உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடல் பசுக்கள் பற்றிய ஓவியப்போட்டி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சை வனசரக அலுவலர் ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. இந்த ஓவிய போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.