பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் பாரம்பரியத்தையும் பழமையும் மீட்கும் முயற்சியாக வள்ளி கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றம் சௌண்டம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் பாட்டு பாடி வள்ளிகும்மி பாடலுக்கு ஆடி அசத்தினர். இதில் முள்ளுப்பாடி,கிணத்துக்கடவு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தை பார்த்து ரசித்தனர்.