Skip to content
Home » பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா(37) உள்ளிட்ட ஏழு பேரை சென்னை, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம்  நதியா அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது..  சமீபகாலமாக  ‘ஸ்மார்ட் போன்’ செயலி வாயிலாக, விபசார தொழில் குறித்து தெரிந்து கொண்டேன். பணம் அதிகம் கிடைக்கும் என்பதால், அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன். என்னுடன் டாக்டர் தாமஸ் சாலையில் வசித்து வரும் என் உறவினர்கள் சுமதி, (43) ஜெயஸ்ரீ(43), ஆகியோரும்  புரோக்கராக, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (31) என்பவரும் இருந்து வந்தார். பிளஸ் 2 படித்து வந்த என் மகள், தன்னுடன் படிக்கும் தோழிகளை வீட்டுக்கு அழைத்து வருவார். அவர்களின் குடும்ப பின்னணி குறித்து விசாரிப்பேன். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவியரை குறிவைத்து, அவர்களுக்கு தேவையான உடைகள், வளையல் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பேன். தோழியின் தாய் என்பதால் என்னை நம்பினர். அவர்களிடம், குடும்ப வறுமையை போக்கி விடலாம் என, நைசாக பேச்சு கொடுத்து, வீட்டில் தனியாக இருக்கும் வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விருந்தாக்கினேன். அவர்களிடம், 15 – 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பேன்.
ஆனால், மாணவியருக்கு, 500 – 1,000 ரூபாய் கொடுப்பேன். அடுத்த முறை அழைக்கும் போது சம்மதம் தெரிவிக்காத மாணவியரிடம், ‘உன் அந்தரங்க வீடியோ மற்றும் படங்கள் என்னிடம் உள்ளன. அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என, மிரட்டி பணிய வைப்பேன். அவர்களும் வேறு வழியின்றி, ‘பதிப்பகத்தில் புத்தகம் அடுக்கி வைக்கும் வேலைக்கு செல்கிறேன். அதிகாலையில் தான் வீட்டிற்கு வருவேன் என கூறிவிட்டு வருவார்கள் எனவும் எங்களிடம் 70 வயது நபர்கள் கூட கஸ்டமராக உள்ளார் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *