மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனயைடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் சங்கர் ஆணைக்கிணங்க நகராட்சி அதிகாரிகள் மயிலாடுதுறை நகரில் விஜித்ராயர் தெரு , பட்டமங்கல தெரு , காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சேந்தங்குடி பகுதியிலுள்ள கோசாலைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் தொகையை செலுத்தி பின்பு உரிமையாளர்கள் மாட்டினை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.