கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி உலா வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அடர்ந்த சோலையிலிருந்து வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு அருகில் உள்ள தேயிலை காட்டுக்குள் நுழைந்தது . இதனை அறிந்த அங்குள்ள இளைஞர்கள் அங்கு சென்று யானையைப் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் கோபம் கொண்ட ஒற்றைகாட்டு யானை அங்கிருந்த சவுக்கு மரத்தை சாய்த்து கோபத்தை வெளி்க் காட்டியது இருப்பினும் இளைஞர்கள் அதனை நெருங்கவே கோபம் கொண்ட யானை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தது, இதனால் பயந்து போன இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறினர். குடியிருப்பு மற்றும் எஸ்டேட் பகுதியில் அதிக அளவில் பலாமரம் இருப்பதால் பழங்களை தின்பதற்காக குடியிருப்புகளை நோக்கி யானைகள் வருகின்றது. குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையா வண்ணம் வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/elephent-2.jpg)