வைகோவின் மகன் துரை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது.. எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இதனால் அவர் சென்னைக்கு செல்ல உள்ளார். தந்தை விரைவில் நலம் பெறுவார். அச்சம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/04/வைகோ-அறிக்கை.jpg)