அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் சோழ கங்கம் என்னும் பொன்னேரி 1400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.
தற்பொழுது பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரி சுருங்கி 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாததால் தரை பகுதியாக உள்ளது. இந்த பொன்னேரி தற்போது மருந்து கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு கொட்டுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.