கோடைகால துவங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையில் மழை நீர் இரு கரைகளையும் தொட்டு வழிந்து செல்கிறது. இதனால் அமராவதி ஆற்றில் நீர்வரத்தால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தடுப்பனைக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.