மாண்டஸ் புயல் நேற்று இரவு கரைகடந்தது. அப்போது கடலோர மாவட்டமான மயிலாடுதுறையில் பெரும் பாதிப்பு இருக்கும் என கருதி மாவட்ட நிர்வாகம் முன்றேபாடு பணிகளை செய்திருந்தது. புயல் கரைகடந்தபோது தரங்கம்பாடி பெருமாள்பேட்டை உள்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மின்சார லைனில் மரங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.
உடனடியாக அவற்றை மின் ஊழியர்கள் அகற்றி அப்புறப்படுத்தி மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடல் சீற்றம், பலத்த காற்று காரணமாக பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான மடவாமேடு, சின்னமேடு, சந்திரபாடி உள்ளிட்ட பல மீனவ கிராமங்களை கடல் நீர் சூழ்ந்தது. மற்றபடி மாவட்டங்களில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. தொடர்ந்து குளிர்காற்றுடன் அவ்வப்போது லேசான மழை தூறல் நீடிக்கிறது.