சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து பொன்னமராவதி சாலையில் காவலர்கள் குடியிருப்பு அருகே பாதி கட்டிய நிலையில் உபயாேகமற்ற கட்டிடத்தில் அவ்வழியாக சென்ற 15-க்கும் மேற்பட்டோர் மழைக்கு ஒதுங்கினர். அப்போது திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த 6 பேருக்கும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.