கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும், எதிர் திசையில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த மினி லாரியும் ஒன்றுக்கொன்று எதிர்பாராத விதமாக மோதியதில் மினி லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த விபத்தில் பஸ் பயணிகள் 11 பெண்கள் உள்பட 24 பேர் காயம் அடைந்தனர்.
இதில் பஸ் டிரைவர் ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 37), வீராச்சாமி(வ 34) , மேனகா (வ 23), சரஸ்வதி (வ 39), பிரகதீஸ்வரன் (வ 25), சிவராமன்(வ38), பார்வதி (வ 35), மருதாயி (வ 68), கிருத்திகா (வ 35), கணேசன் துரைசாமி (வ 40), சேகர் (வ 58), மனோகர் (வ 56), லாவண்யா (வ29), ஹேமலதா (வ 31), சுதர்சன் (வ 32), ரவிச்சந்திரன் (வ 56), தனபால்(வ35), குமார் (வ 45), ரவி (வ 39), மகாமுனி (வ 65), ஜெயந்தி (வ 52). லட்சுமி (வ 55), சௌந்தர்யா (வ 27), கல்பனா (வ 26) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த டிரைவரின் விவரங்கள் குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தினால் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.