Skip to content
Home » வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார்…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்  குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகள் போடப்பட்ட வழக்கை 494 நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் இதுவரையில் 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களாகவும்,  31 பேரிடம் டிஎன்ஏ மாதிரி பரிசோதனையும் 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் முரளிராஜா என்பவரை இன்று விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு சிபிசிஐடி போலீசார் சட்டப்பிரிவு 41A யின் படி சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி புதுகை  சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் முரளி ராஜா விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

ஏற்கனவே அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து நேரடி சாட்சியங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின் சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் அவரை சட்டப்பிரிவு 41 ஏ யின் படி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வேங்கவயல் வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ்காரர்  விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில் இன்று புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!