ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று இரவு 8 மணியளவில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
Tags:தொகுதி ஒதுக்கீடு