ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார். இது தொடர்பாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறி இருந்தார்.
அதன்படி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று இரவு 8 மணியளவில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவருடன் திருநாவுக்கரசர் எம்பி, முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் இவர்கள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.