இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர், ‛‛ பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாக செயல்பட அடிப்படை உரிமை உண்டு என தெரிவித்தார். அயர்லாந்து பிரதமர் சிம்சன், ‛‛ பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது” என தெரிவித்துள்ளார். இதற்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளுக்கான தூதர்களை திரும்பப் பெறுவது குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்துள்ளது. டெலி அவிவ் நகரில் உள்ள அயர்லாந்து, நார்வே தூதர்களை அழைத்து விளக்கம் கோரவும் இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களான ஸ்லோவேனியா மற்றும் மால்டா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன.