ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். வரும் வழியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஈரான் அதிபர் உள்பட 17 பேரும் பலியானார்கள். இன்று காலை ஈரான் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விபத்து குறித்து இந்திய பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ரைசி குடும்பத்துக்கும், ஈரான் நாட்டுக்கும் அவர் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
இப்ராகிம் ரைசி காலத்தில் இந்தியா_ ஈரான் உறவு வலுப்பட்டதாகவும், அவரது மறைவு தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் மோடி கூறி உள்ளார்.