கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக விமானத்தில் இருந்தவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையறிந்த விமானி உடனடியாக திருச்சி விமானநிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கோரினார். அந்த விமானம் தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டது. அவசரமாக விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.