டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று வீடியோ ஒன்றில் .. ஆம் ஆத்மி தலைவர்களை சிறையில் அடைக்க பா.ஜ., விரும்புகிறது. ஜெயில் விளையாட்டை பா.ஜ., விளையாடி வருகிறது. நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மூத்த தலைவர்களுடன் பா.ஜ., தலைமை அலுவலகம் வருகிறேன். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறேன். யாரை வேண்டுமானாலும் நீங்கள் சிறையில் அடையுங்கள் என பிரதமரிடம் சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் பேசியுள்ளார். ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் தனது உதவியாளர் பிபவ் குமார் கைதான நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.