தமிழ்நாட்டில் நாளை பரவலாக மழை பெய்யும், சூறைக்காற்றும் வீசும். அதே நேரத்தில் நெல்லை, குமரி , தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 20 செ.மீ. மழை பொழியும். அதைவிட அதிகமாகவும் பெய்யலாம். எனவே மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்துக்கு பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது. அதே நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஈரோடு, சேலம் திருச்சி, கரூர், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மே 19, 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.18, 22 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்த நிலையில் வரும் 22ம் தேதி தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம்(புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த புயல் சின்னம்வரும் 24ல் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.