Skip to content
Home » கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கரை விசாரணை நடத்த வேண்டும் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலைய ஏடிஎஸ்பி கோடிலிங்கம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதன் அடிப்படையில் ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மாலை 4 மணிக்கு திருச்சி மகிலா குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அதன் பின்னர் திருச்சி மகிலா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டார். தொடர்ந்து ஏதேனும் காவல்துறையினர் விசாரணையில் துன்புறுத்தப்பட்டீர்களா என கேட்டார். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தான் துன்புறுத்தப்படவில்லை மேலும் சரியான நேரத்தில் உணவும் காவல்துறையினர் கொடுத்தனர் என கூறினார். இதனை தொடர்ந்து தன்னை திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார் எதற்காக மாற்ற வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது சவுக்கு சங்கர் தான் கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டுள்ள வார்டில் வைக்கப்பட்டுள்ளேன் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் இதன் காரணமாக தன்னை திருச்சி சிறைக்கு அல்லது சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். உங்களது புகார் குறித்து கோவை சிறைக்கு அறிவுறுத்தப்படும் இது குறித்து கோவை சிறை முடிவெடுக்க உங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மே 28ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகிலா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *