17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பிளேஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி எது என்பதில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகளிடையே போட்டி நிலவுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
ஆனால் நாளை பெங்களூருவில் போட்டி நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில் நாளை காலையில் இருந்தே பெங்களூருவில் கனமழை பொழியும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இரு அணிகளின் ரசிகர்களும் கவலையடைந்துள்ளனர். இப்போட்டி மழையால் கைவிடப்பட்டால், சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.