மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கன மழையால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று மதியம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டின. இதனால் அருவிகளில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.
பழைய குற்றாலம் அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக்கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். 1 கிமீ தொலைவில் அவனது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.