உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது; “காங்கிரஸமற்றும் சமாஜ்வாடி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். குழந்தை ராமர், கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார்.
புல்டோசர்களை எங்கு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் இருந்து அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பா.ஜ.கதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், இந்தியா கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் மோடி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்று அவர்கள் கூறினர்.