பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு , பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சவுக்கு கோவை சிறையிலும், பெலிக்ஸ் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமந்த், வழக்கின் உண்மைத் தன்மை மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
அதைத்தொடந்து நேற்று இரவு திருச்சி புறநகர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நி்லையத்தில் சவுக்கை தங்கவைத்தனர். அங்கு அவரிடம் இரவில் சிலமணி நேரம் விசாரணை நடத்தி்னர். இன்று காலை சவுக்கை திருச்சி டவுனில் ஒரு இடத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின்போது சவுக்கு வெளி்யிட்ட தகவல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இன்று மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும். அதன் பிறகு அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறைக்கு கொண்டு செல்வார்கள் என ெதரிகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கோவை போலீசிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜெரால்டு இன்று பலத்த பாதுகாப்புடன் கோவை கொண்டு செல்லப்பட்டார்.