சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக், தயிர் வியாபாரி. இவர் கடந்த 9ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் செலுத்த ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது போக்குவரத்து போலீஸ் உடையில் இருந்த ஒருவர் சித்திக்கிடம் இருக்கும் பணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த பணம் உனக்கு எப்படி வந்தது என மிரட்டினார். பின்னர் பணத்தை பறித்துக்கொண்டு போய்விட்டார்.
இது குறித்து சித்திக் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். ஏடிஎம் கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் உடையில் இருந்தவர் பணத்தை பறிப்பது பதிவாகி இருந்தது. பின்னர் பணம் பறித்தவா், யார் என விசாரித்தபோதுழ அவர் சென்னை ஐசிஎப் காவல்நிலையத்தில் போக்குவரத்து எஸ்.எஸ்.ஐயாக இருக்கும் ராமமூர்த்தி என்பது தெரியவந்தது. எனவே அவரை பிடித்து விசாரித்தபோது அவர் பணத்தை பறித்ததை ஒத்துக்கொண்டார்.
அதன் பேரில் அவரை கைது செய்து சி்றையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ரத்தோர் உத்தரவிட்டார்.