புதுச்சேரியில் இருந்து இன்று காலை கரூருக்கு ஒரு தமிழ்நாடு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் தமிழ்நாடு எல்லையான கடலூரை நெருங்கும்போது கண்டக்டர் பன்னீர்செல்வம் நெஞ்சுவலிப்பதாக கூறினார். உடனடியாக அவரை பஸ்சில் படுக்க வைத்தனர். டிரைவர் கோபால் பஸ்சை வேகமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓட்டிவந்தார். பஸ்சை டிரைவர் நேராக மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே விட்டார்.
உடனடியாக மற்ற பயணிகள் உதவியுடன் கண்டக்டரை இறக்கி அவசர பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சையை தொடங்கினர். அப்போது பன்னீர்செல்வம் இறந்து விட்டார். டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை ஓட்டிவந்தும் கண்டக்டர் உயிரை காப்பாற்ற முடியவில்லையே என சக பயணிகள் கண்ணீர்விட்டனர்.
மாரடைப்பில் இறந்த கண்டக்டர் பன்னீர்செல்வம் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது அவரது உடல கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.