பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய பெலிக்ஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும், பெலிக்ஸ் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் மீதும் கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெலிக்ஸின் யூடியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் பெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே சவுக்கு மீது பதிவு செய்த வழக்கிற்காக இன்று சவுக்கு திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.