திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூரில் ஆவின் பால் மொத்த விற்பனையாளர் பிரகாஷ் கடை நடத்தி வருகிறார் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அதிகாலை கடைக்கு வந்துள்ளார்.
அப்பொழுது கடையின் பூட்டானது உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் வியாபாரம் செய்து வைத்த பணம் மற்றும் சில்லறைக்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் நாணயம் மொத்தம் 20,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
அருகில் உள்ள கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த கடையில் பணம் ஏதும் இல்லை இதுகுறித்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்