கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது. முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது.. தொடர்ந்து ,ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர், உலக சமாதான அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் மாதேஸ்வரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் காந்தி கிராம நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனித்துரை கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
இன்றைய சமூகம் ஒரு வித மயக்கத்துடன் வாழ்கிறது. அந்த மயக்கம் என்னவென்றால் சில பேர் சொத்து வாங்குவதற்காகவும், சில பேர் புகழ் தேடியும், சில பேர் பொருளை தேடியும், மது போன்ற போதை வஸ்துக்களை தேடியும் சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மயக்கத்தில் இருந்து விடுபட தியானம் ஒன்றே வழி .ஞானிகள் அதையே நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மகரிஷி பரஞ்சோதியார் தமது அருளுரையில் , தனி மனித அமைதிதான் உலக அமைதிக்கு அடிப்படை. எங்கு அமைதி நிலவுகிறதோ, அங்கு கடவுள் உள்ளார். எங்கு கடவுள் உள்ளாரோ, அங்கே தான் அமைதி நிலவும், என குறிப்பிட்டார்.ஓர் இறை ஓர் இனம் என ஒன்று பட்டு,ஞானமும் அரசியலும் ஒன்றுபட்ட அன்றே உலக சமாதானம் என்றார்.நிகழ்ச்சியில்,பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில்,உலக சமாதான அறக்கட்டளை பொது செயலாளர் சுந்தரராமன், அறங்காவலர்கள் டாக்டர் ராஜா பி.ஆறுமுகம்,,விநாயகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.