Skip to content
Home » தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை – திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார். ஏராளமானோர் பங்கேற்பு.‌ இன்று முதல் பொது மக்கள் கண்டு
தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வொண்டர் வேர்ல்ட் அம்ம்யூஸ்மெண்ட் தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார்.

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டாக ஒண்டர் வேல்டு அம்யூஸ்மென்ட் தீம்  பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி நடைபெற்றது. வாண்டையார் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர்கள் பொறியாளர் விஜய் பிரகாஷ் , டாக்டர்.ரஞ்சித் பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,  கே.ஆர் ராமசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பிரபு தீம் பார்க்கை திறந்து வைத்து பேசியதாவது:
டெல்டா மாவட்டம் விவசாயத்தை சார்ந்த பகுதி. இங்கு புதிய முயற்சியாக பொது மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தளமாக வொண்டர் வேல்டு  தீம் பார்க் அமைய பெற்றுள்ளது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் புத்துணர்வு அடைந்திட இந்த தீம் பார்க் நிச்சயமாக பொது மக்களுக்கு உதவும். குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் வந்து செல்ல சிறந்த  இடமாக  வோண்டர்வேல்டு உள்ளது.  தஞ்சை மென்மேலும் சிறக்கட்டும். அன்புச் சொந்தங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி. வொண்டர் வேல்டு தீம் பார்க் பொது மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாண்டையார் கல்வி குழுமங்களின் சேர்மன் குணசேகர வாண்டையார் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் இந்நிறுவனம் சிறந்து விளங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

முன்னதாக நடிகர் பிரபுவின் மனைவி புனிதவதி பிரபு, வாண்டையார் குழுமங்களின் நிர்வாக இயக்குநர்கள் குணசேகர்,பானுமதி குணசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

இதில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், ஓரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், தஞ்சை மத்திய மாவட்ட‌ அதிமுக செயலாளர் ஒரத்தநாடு மா‌. சேகர்,தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் , காங்கிரஸ் நிர்வாகிகள் பி.ஜி.ராஜேந்திரன், வக்கீல் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வொண்டர் வேல்டு அம்யூஸ்மெண்ட் தீம் பார்க் நிறுவனர் மற்றும் சேர்மன் குணசேகர வாண்டையார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *