Skip to content
Home » திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்  தாலுகா  அலுவலகம் அருகே சரவணனின் சொந்த ஊர் தீரா KVG நகரில்  வசிப்பவர்  சரவணன் (35) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மாதங்களுக்கு முன் தான் திருமணம் ஆனது.  இவர் அதே பகுதியில் துறையூர் மெயின் ரோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.   2 தினங்களுக்கு முன்  சரவணனின் மனைவி ஜெசி திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள  தாயார் வீட்டுக்கு போய்விட்டார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்  சரவணன், நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான தீராம்பாளையம் சென்றார்.  வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  வீட்டில் இருந்த  ரூ.4.67  லட்சம் ரொக்கம், மற்றும் 2 மோதரம் ஆகியவற்றை திருடிக்கொண்டுசென்றுவிட்டனர்.

இவரது பக்கத்து வீடான அங்கப்பன் என்பவரது வீட்டிலும் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் அங்கும்  புந்து அங்கிருந்த   ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 41 கவுந் நகைகளை அள்ளிக்கொண்டு போய்விட்டனர்.

தகவல் அறிந்த ஜீயபுரம்  டிஎஸ்பி பாலசந்தர் , மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுராமன், மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.. பின்னர் கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் படை பிரிவினரும், சிறப்பு காவல்படையினரும் வந்து  விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!