மேட்டூர் அணையில் 100க்கு அடி மேல் தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. அத்துடன் நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. எனவே இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. அதே நேரம் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே ஜூலை மாதத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நி்லையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை பிரித்து அனுப்பும் முக்கொம்பு தடுப்பணையின் ஷட்டர்களை சீரமைக்கும் பணியினை நீர்வளத்துறை செய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எலமனூர் மற்றும் வாத்தலை இடையே முக்கொம்பு தடுப்பணை அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காவிரியில் இருந்து வெள்ளம் கொள்ளிடம் ஆற்றுக்கு பிரிகிறது. காவிரியின் குறுக்கே 594.30 மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள தடுப்பணை, அதிகபட்சமாக வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பணையின் 41 ஷட்டர்களிலும் ₹17 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்னதாக, பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக தொடர் செயல்பாட்டால், தடுப்பணை ஷட்டர்கள் பழுதடைந்துள்ளன. ஷட்டரில் உள்ள ரோலர் சக்கரங்கள் மேலே தூக்கும்போது அல்லது கீழே இறக்கும் போது அடிக்கடி அடிபட்டு, அவற்றை இயக்குவது கடினமாகிறது. சில கான்கிரீட் கவுண்டர் வெயிட்களும் சேதமடைந்து, ஷட்டர்களை உயர்த்தும்போது அல்லது இறக்கும்போது உடைந்துவிடும். ஷட்டர்களின் தூக்கும் சங்கிலி மற்றும் ரப்பர் சீல்களும் சேதமடைந்துள்ளன. தவிர, center hoist cover மற்றும் சில வென்ட்களின் chain sprocket கவர்கள் மற்றும் shutter skin பிளேட்களின் பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகள் அனைத்தும் இப்போது தீர்க்கப்படும் வகையில் சீரமைப்பு பணி நடக்கிறது.
ன.