Skip to content
Home » உணர்ச்சிகளுடன் விளையாடி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் சுகேஷ்…..நடிகை ஜாக்குலின் வாக்குமூலம்

உணர்ச்சிகளுடன் விளையாடி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் சுகேஷ்…..நடிகை ஜாக்குலின் வாக்குமூலம்

  • by Authour

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன. இவரது மோசடியெல்லாம் கோடிக்கணக்கிலேயே நடந்துள்ளன. இவர் நடமாடும் தொனியைப் பார்த்து பெரும் கோடீஸ்வரர்கள்கூட ஏமாந்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்ன வழக்கில் டில்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அமலாக்க அதிகாரிகளும், டில்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்க அதிகாரிகள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை பல வியப்பூட்டும் தகவல்களை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது.

இதை அடிப்படையாக கொண்டு குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடந்தது. சுகேஷ் சந்திரசேகர் இதற்கு முன்பு எத்தனை கோடிகளை மோசடி செய்திருந்தாலும், இந்த ரூ.200 கோடி மோசடி அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருக்கிறது. அதற்கு நடிகைகளுடனான அவரது பழக்கமும் ஒரு காரணம். மோசடி பணத்தில் சுகேஷ் சுகபோகமாக வாழ்ந்துள்ளார். சிறையில் நடிகைகளை வரவழைத்து பொழுதுபோக்கும் அளவுக்கு சகல வசதிகளுடன் இருந்துள்ளார்.இதற்கெல்லாம் அவருடைய உதவியாளர் பிங்கி இரானி உதவி செய்திருக்கிறார்.

சுகேசும் ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார். ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ‘டுகாட்டி’ மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இளம் நடிகைகள் மற்றும் ‘மாடலிங்’ பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். அவர் விரும்பும் நடிகைகளை நயமாக பேசி, சுகேசிடம் வசமாக சிக்கவைப்பது பிங்கி இரானியின் வேலை என கூறப்படுகிறது.

அதற்கான பணப்பலன்களை பிங்கி இரானி உடனுக்குடன் அனுபவித்து வந்துள்ளார். இப்படி சிக்கியவர்கள்தான் நடிகைகள் நோரா பதேகி, அருஷா பாட்டீல், சோபியா சிங் உள்ளிட்டோர். அவர்களில் பலர், வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த நிலையில் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அதில் சுகேஷ் தனது வாழ்க்கையை  அழித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். சுகேஷ் எனது உணர்ச்சிகளுடன் விளையாடி ‘எனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார் என கூறி உள்ளார். குற்றவாளி சுகேஷின் குற்றப் பின்னணி வெளியான பிறகுதான் அவனது உண்மையான முகம் தனக்குத் தெரியவந்தது என்று ஜாக்குலின் கூறினார். பிங்கி இரானிக்கு அவரது பின்னணி பற்றி தெரியும், ஆனால் அவர் தன்னிடம் உண்மையை சொல்லவில்லை என்றும் அவர் கூறி உள்ளார். இதற்கிடையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள மற்றொரு நடிகையும் பாலிவுட் நடனக் கலைஞருமான நோரா பதேகியும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் சுகேஷ் நான் அவரது காதலியாக மாறினால், எனது தொழில் வாழ்க்கைக்கு நிதியளிக்க முன்வந்ததாக கூறினார். சுகேஷின் மனைவி லீனா மரியா நடத்திய நிகழ்ச்சியில் நடனப் போட்டியில் நடுவராக இருந்ததற்காக எனக்கு ஐபோன் மற்றும் குஸ்ஸி பேக் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *