Skip to content
Home » 75 வயதுக்கு மேல் ஓய்வு என்று பா.ஜ.,வில் எந்த விதியும் இல்லை… அமித்ஷா விளக்கம்..

75 வயதுக்கு மேல் ஓய்வு என்று பா.ஜ.,வில் எந்த விதியும் இல்லை… அமித்ஷா விளக்கம்..

டில்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‛இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்கின்றனர். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என நான் அக்கட்சியிடம் கேட்கிறேன். பிரதமர் மோடிக்கு வரும் செப்., 17 அன்றுடன் 75 வயதாகிறது. பா.ஜ.,வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை அவர் வகுத்துள்ளார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது பிரதமருக்கு 75 வயது ஆகப் போகிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால், முதலில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவியில் இருந்து இறக்குவார்கள். பிறகு அமித்ஷா பிரதமராக பதவியேற்பார். அமித்ஷாவுக்காக பிரதமர் ஓட்டு கேட்கிறார். மோடியின் கியாரன்டிகளை அமித்ஷா நிறைவேற்றுவாரா என கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு தெலுங்கனாவில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..  நாட்டில் அனைத்து பகுதி மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நிற்கின்றனர். பா.ஜ.,400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு நன்கு தெரியும். இதனால் தான் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 75 வயதுக்கு மேல் ஓய்வு என்ற விதி பா.ஜ.,வில் இல்லை. 2029 வரை மோடியை நாட்டை வழிநடத்துவார். வரும் தேர்தலிலும் வழிநடத்துவார். இண்டியா கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பொய் பரப்பி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது. தான் கைது செய்யப்பட்டது தவறு என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வேண்டினார். ஆனால், அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்த நாள் அவர் விசாரணை அமைப்புகளிடம் சரண் அடைய வேண்டும். தனக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதாக கெஜ்ரிவால் நினைத்துக் கொண்டால், சட்டத்தை பற்றிய புரிதல் அவருக்கு இல்லை என்பதையே காட்டுகிறது என்றார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!