கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா அவரது மனைவி காமாட்சி ஆகியோர் கண் தெரியாதவர்கள்-தற்போது வடலூரில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
இளையராஜா காமாட்சி தம்பதியினருக்கு சூர்யா வயது 9, அன்பழகி வயது ஆறு ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வடலூரில் பிச்சை எடுத்து தொழில் நடத்தி வருவதால் அதை விரும்பாத அத்தை அமுதா மேற்கண்ட இரண்டு குழந்தைகளையும் தானே பெற்றோரின் ஒப்புதலுடன் தனது தம்பியின் குழந்தைகளை தேனாம்படுகை அழைத்து வந்து வளர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழி தவறி கும்பகோணம் வந்த சிறுவன் சூர்யா வயது (9) கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வரக்கூடிய நடேசன் தனியார் பஸ்ஸில் ஏறி வந்துள்ளார்.
சிறுவன் மட்டும் தனியாக பயணம் செய்வதை அறிந்த பஸ்ஸின் நடத்துனர் வினோத் – சிறுவன் சூர்யாவை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சிறுவனிடம் விசாரணை செய்த ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் சிறுவனை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார்கள் சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சூர்யாவின் உறவினர்கள் தேனாம்படுகை கிராமத்தில் இருந்து வந்து சிறுவனை போலீசாரிடம் இருந்து அழைத்து சென்றனர். சிறுவனை கண்டுபிடித்து கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்
சிறுவனின் மாமாவான மாரியப்பன் கூறுகையில் சிறுவனின் பெற்றோர்கள் வடலூரில் பிச்சை எடுப்பதால் சிறுவனின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கருதி தானே வளர்த்து வருவதாகவும் தேனாம் படுகையில் நான்காம் வகுப்பு படிக்க வைத்திருப்பதாகவும் கூறி கண்கலங்கினார்
வழி தெரியாது தவித்த ஒன்பது வயது சிறுவனை மீட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.